Swiss News In Tamil

ஷாப்பிங் சென்டரின் கட்டுமானப்பணி விபத்து : இருவர் உயிரிழப்பு

ஷாப்பிங் சென்டரின் கட்டுமானப்பணி விபத்து : இருவர் உயிரிழப்பு

ஷாப்பிங் சென்டரின் கட்டுமானப்பணி விபத்து : இருவர் உயிரிழப்பு லௌசானில் ஷாப்பிங் சென்டரின் கட்டுமானப்பணி ஒன்றின் போது சாரக்கட்டு அல்லது கட்டுமான கட்டமைப்பு இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்

இன்று காலை 9.30 மணியளவில் சற்று முன்னர் குறித்த சம்பவம. கட்டுமானப்பணிக்காக உருவாக்கப்பட்ட சாரக்கட்டுகள் சரிந்து விழுந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் இருவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். வாட் கன்டன் லௌசானின் புறநகர்ப் பகுதியான பிரில்லி மேல்லே (Prilly-Malley) நகரில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷாப்பிங் செய்திகள் Nau ch 1 செய்திகள் Nau ch

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் போலீஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.  விபத்தில் மேலும் பலர் காயமடைந்து இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Credits (c) (sda)

Related Articles

Back to top button