Swiss News In Tamil

சூரிச் விமான நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சூரிச் விமான நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சூரிச் விமான நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல் திங்கட்கிழமை காலை, செப்டம்பர் 16, 2024 அன்று, சூரிச் கண்டோனல் பொலிசார் விமான நிலையத்தில் 20 கிலோகிராம் கஞ்சாவை தனது பொதிகளில் எடுத்துச் சென்ற ஒருவரைக் கைது செய்தனர்.

சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் மற்றும் சூரிச் கன்டோனல் காவல் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில், சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

சூரிச் விமான நிலையத்தில்
 

பாங்காக்கில் இருந்து வந்திறங்கிய 18 வயது டச்சுக்காரர், லக்சம்பர்க் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரை புறப்படும் வாயிலில் சூரிச் கண்டோனல் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த வழக்கு தற்போது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்

Related Articles

Back to top button