Swiss News In Tamil

கன்டோன் ஆர்காவில் கத்திக்குத்து தாக்குதல்… பலர் காயம்

கன்டோன் ஆர்காவில் கத்திக்குத்து தாக்குதல்… பலர் காயம் சுவிஸ் நகரமொன்றில், நேற்று திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தியதில் பலர் காயமடைந்தார்கள்.

பலர் காயம்

சுவிட்சர்லாந்திலுள்ள Zofingen நகரில், நேற்று மாலை திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தியதில் பலர் காயமடைந்தனர்.

ஆர்காவில்

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல்தாரி ஒரு கட்டிடத்திற்குள் சென்று மறைந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மணி நேரத்துக்குப் பின், சிறப்பு பொலிஸ் படையினர் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்தியது ஒருவர் மட்டும்தானா, அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button