Swiss News In Tamil

சுவிஸ் நுகர்வோர் செலவில் உயர்வு – உள்நாட்டு பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி

சுவிஸ் நுகர்வோர் செலவில் உயர்வு – உள்நாட்டு பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி

சுவிஸ் மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். PostFinance தனது வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட  (Card) கார்டு பரிவர்த்தனைகளின் அடிப்படையில் கணக்கிட்ட நுகர்வு குறியீட்டின்படி, ஜூலை மாதத்தில் நுகர்வு 2024ஆம் ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடும்போது 1.7% உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் அதிக வளர்ச்சி காணப்படாத நிலையில் (+0.4%), இப்போது முன்னேற்றம் மீண்டும் உற்சாகமடைந்துள்ளது.

அழகு மற்றும் நலத் துறை முன்னிலையில்

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அழகு மற்றும் நலத் துறையில் ஏற்பட்ட அதிக செலவினமே குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த துறை வளர்ச்சி கண்டுள்ளதாக PostFinance வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்குபுறம்பாக, ஓய்வு நேர பொருட்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான செலவுகளும் அதிகரித்துள்ளன.

ஏற்றுமதி துறைக்கு சவால்கள் – உள்நாட்டு வளர்ச்சிக்கு நம்பிக்கை

அமெரிக்காவின் உயர் சுங்க வரிகள் காரணமாக, ஏற்றுமதி சார்ந்த துறைகள் கடினநிலையை எதிர்கொள்ளும் சூழலில், இந்த உள்நாட்டு பொருளாதார எழுச்சி சுவிஸ் பொருளாதார வளர்ச்சிக்கு மிகச் சரியான நேரத்தில் வந்துள்ளது என, சுவிஸ் தபால் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த நிதி நிறுவனம் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button