Swiss News In Tamil

மைக்ரோசாப்ட் சார்பை குறைக்க சுவிட்சர்லாந்து திட்டம்

மைக்ரோசாப்ட் சார்பை குறைக்க சுவிட்சர்லாந்து திட்டம்

சுவிட்சர்லாந்து, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Microsoft மீது தன்னுடைய சார்பை குறைக்கும் நோக்கில் நீண்டகால திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் கூட்டாட்சி நிர்வாகம், அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் மைக்ரோசாப்ட் சார்பை படிப்படியாக குறைக்கும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. இது, சமீபத்தில் ஆயிரக்கணக்கான அரசு கணினிகளில் Microsoft 365 பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணியிலும் வந்துள்ள முடிவாகும். அந்த அறிமுகம் தரவு பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் எழுப்பியிருந்தது.

இந்நிலையில், புதிய சாத்தியமான ஆய்வொன்றின் மூலம் திறந்த மூல (open-source) மென்பொருட்களுக்குத் மாற்றம் மேற்கொள்ளுவது நடைமுறையில் சாத்தியமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முன்மாதிரியாக ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

n9b 1

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுவிஸ் அதிகாரிகள் மைக்ரோசாப்ட் உரிமங்களுக்காக ஒரு பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் செலவழித்துள்ளதாக தகவல்கள் காட்டுகின்றன. இதன் காரணமாக, செலவு குறைப்பும் தரவு கட்டுப்பாடும் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், அரசு துறைகளில் தொழில்நுட்ப சுயாதீனம் மற்றும் தரவு பாதுகாப்பு மேலும் மேம்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Back to top button