ஃப்ராவென்ஃபெல்ட் – கிரொய்ஸ்லிங்கன்: திருட்டு, வாகன உடைப்பு – மூவர் கைது
ஃப்ராவென்ஃபெல்ட் – கிரொய்ஸ்லிங்கன்: திருட்டு, வாகன உடைப்பு – மூவர் கைது
சுவிட்சர்லாந்தின் துர்காவ் கன்டோனில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாகன உடைப்பு சம்பவங்களில் தொடர்புடைய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Kantonspolizei Thurgau தெரிவித்ததன்படி, மூவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் ஃப்ராவென்ஃபெல்ட் நகரில் உள்ள Schlosspark வர்த்தக மையத்தில் மாலை 5.15 மணியளவில் தொடங்கியது. அங்கு பாதுகாப்பு பணியாளர் ஒருவருக்கு மூவர் சந்தேகமாக தோன்றியதால், அவர்கள் கடையை விட்டு வெளியேறும் போது சோதனைக்கு நிறுத்தப்பட்டனர். அந்த நேரத்தில், 18 வயதுடைய அல்ஜீரிய நபர் பாதுகாப்பு பணியாளரை பலமுறை தாக்கியுள்ளார். இதில் 30 வயதுடைய பாதுகாப்பு ஊழியர் லேசாக காயமடைந்தார்.
அந்த நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டதுடன், அவரிடமிருந்து நூற்றுக்கணக்கான ஃப்ராங்குகள் மதிப்புள்ள திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர்.
இதே நேரத்தில், மற்ற இரு நபர்கள் திருட்டுப் பொருட்களுடன் தப்பிச் சென்றனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் 18 வயதுடைய லிபிய நபரும் 26 வயதுடைய துனீசிய நபரும் என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், இந்த இருவரும் அதே நாள் இரவு சுமார் 7.15 மணியளவில் கிரொய்ஸ்லிங்கன் நகரில் Gartenstrasse பகுதியில் ஒரு வாகனத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகள் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், குறித்த இருவரையும் கிரொய்ஸ்லிங்கனில் உள்ள கூட்டாட்சி அகதி மையத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஃப்ராவென்ஃபெல்ட் அரசுத் தரப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம், சமீப காலங்களில் சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குற்றச்செயல்களை மீண்டும் வெளிப்படுத்துகிறது.





