Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் குப்பை லாறியில் மோதி வயோதிபர் பலி

ஆர்காவ் கன்டோனில் குப்பை லாறியில் மோதி வயோதிபர் பலி

ஆர்காவ் கன்டோனில் குப்பை லாறியில் மோதி வயோதிபர் பலி வெள்ளிக்கிழமை காலை ஆர்காவ் கன்டோன் சூஹ்ர் (suhr)  பகுதியில் ஒரு பாதசாரி குப்பை லாரியில் மோதி படுகாயமடைந்தார்.

71 வயதான அவர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார் என்று பிராந்திய ஒளிபரப்பான TeleM1 க்கு அளித்த பேட்டியில் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

kehricht grungut avif 1360×680 11 01 2024 06 54 PM

( Bahnhofstrasse) பான்ஹோஃப்ஸ்ட்ராஸ்ஸில் காலை 9:30 மணியளவில் டிரக் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் சென்றபோது விபத்து ஏற்பட்டது.  இச்சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. போலீசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Credits (c) KantonPolizei Aargau

Related Articles

Back to top button