Swiss News In Tamil

சென்ட்காலன் wattwil பகுதியில் கோரவிபத்து மூவர் பலி

சென்ட்காலன் wattwil பகுதியில் கோரவிபத்து மூவர் பலி

சென்ட்காலன் wattwil பகுதியில் கோரவிபத்து மூவர் பலி சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வயது முதிர்ந்த இருவரும் ஒன்பது வயதான சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றில் பயணித்தவர்கள் தபால் திணைக்களத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றில் மோதியதனால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

 

சென்ட்காலன் பகுதியில் கோரவிபத்து மூவர் பலி

சென் கேலன் கான்டனின் வாட்வில் பகுதியில் வியாழன் அன்று மாலை 4:15 மணிக்கு சற்று முன்பு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 76 வயதான சாரதியும், 75 வயதான சக பயணியும் இந்த விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் பஸ்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

பஸ்ஸில் பயணித்த சிலரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button