Swiss News In Tamil

குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு

குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு

குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு சுவிட்சர்லாந்தில் சுமார் 15 சதவீத குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆரோக்கியமற்ற உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக Jung Food  உணவுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவ விவகாரங்களுக்கான மத்திய அலுவலகம் பல ஆண்டுகளாக இந்த உணவுப் பொருட்களின் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களைத் தானாக முன்வந்து கட்டுப்படுத்துமாறு தொழில்துறையினரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குழந்தைகளை

இருப்பினும்இ இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவ விவகாரங்களுக்கான மத்திய அலுவலகம் இப்போது மிகவும் இனிப்பு, அதிக கொழுப்பு அல்லது அதிக உப்பு மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் தயாரிப்புகளுக்கான விளம்பரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட விதிமுறைகளை உருவாக்கி வருகின்றது.

அதன் படி, நான்கு முதல் ஒன்பது வயதுடைய குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு ‘குறிப்பாக தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button