Swiss News In Tamil

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு சுவிட்சர்லாந்தில் அஞ்சலி

தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான இராஜநாயகம் பாரதிக்கான அஞ்சலி கூட்டம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (30) சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் லுட்சேர்ன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மூத்த ஊடகவியலாளர்கள் பலருடன் இளம் ஊடகவியளாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக திரு:கனகரவி மற்றும் திரு:வேதநாயகம் போன்ற மூத்த ஊடகவியளாளர்களும் இளம் ஊடகவியளாளர்களான மயூரன், அசோக், Jerad, மதன் உட்பட இன்னும் பல ஊடக ஆர்வலர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியளார்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக மூத்த போராளி காந்தன் உட்பட பாரதி இராஜநாயகம் அவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பாரதிக்கு சுவிட்சர்லாந்தில் அஞ்சலி WhatsApp Image 2025 03 30 at 20.03.43 9ec6c9a5 WhatsApp Image 2025 03 30 at 20.03.43 62aeb1f3 WhatsApp Image 2025 03 30 at 20.03.43 c92e52ed WhatsApp Image 2025 03 30 at 20.03.43 fa4c5651 WhatsApp Image 2025 03 30 at 20.03.44 22aa6006 WhatsApp Image 2025 03 30 at 20.03.44 cd2484aa WhatsApp Image 2025 03 30 at 20.03.44 cdcc272c WhatsApp Image 2025 03 30 at 20.03.44 e7c8c196 WhatsApp Image 2025 03 30 at 20.03.44 f132c588 WhatsApp Image 2025 03 30 at 20.03.44 f484a9a0

சிரேஷ்ட ஊடகவியலாளர்

ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி தனது 62 ஆவது  யாழ்ப்பாணத்தில் காலமானார். மூத்த ஊடகவியலாளரான இவர் சுமார் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழின் பிரதம ஆசிரியராக ஒரு வருடம் கடமை புரிந்தார்.

35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிராந்திய ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button