Swiss News In Tamil

சூரிச் விமான நிலையத்தில் அமலுக்கு வரும் புதிய நடமுறை.!

சூரிச் விமான நிலையத்தில் அமலுக்கு வரும் புதிய நடமுறை.!

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) நவம்பர் 17 முதல் சூரிச் விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த முறை அமல்படுத்தப்படுவதால், EU மற்றும் EFTA நாடுகளுக்கு வெளியான மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எல்லைச் சோதனை முறையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் சுவிஸ், EU மற்றும் EFTA நாடுகளின் குடிமக்கள் தற்போது வரை பயன்படுத்திய நடைமுறைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

Entry/Exit System திட்டம் பயணிகளின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் தகவல்களை உயிரியல் அடையாளங்களுடன் (புகைப்படம், கைரேகை) பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் முறையாகும். இத்திட்டத்தின் நோக்கம் எல்லைச் சோதனைகளை நவீனமாக்குவதும், பாதுகாப்பை அதிகரிப்பதும், அனுமதியில்லாத தங்குதொடர்பான தவறுகளை கண்டறிவதுமாகும். புதிய முறையால் முதன்முறையாக EU பகுதிக்குள் நுழையும் மூன்றாம் நாடு குடிமக்களுக்கு வழக்கத்தை விட சில நிமிடங்கள் கூடுதல் நேரம் பிடிக்கலாம்.

N9 3

இந்த முறை ஏற்கனவே ஜெனிவா மற்றும் பாசல் EuroAirport-இல் கடந்த அக்டோபர் 12 முதல் செயல்பாட்டில் உள்ளது. அன்றே EU நாடுகளிலும் ஒருங்கிணைந்த முறையில் இந்த அமைப்பு அறிமுகமானது. சூரிச் விமான நிலையம் சுவிஸ்சில் Entry/Exit System அமல்படுத்தப்படும் மூன்றாவது முக்கிய நுழைவாயிலாகிறது.

சுவிஸ்சில் அடிக்கடி பயணிக்கும் தமிழ் பேசும் சமூகத்திற்கும் இதில் சில நடைமுறைகள் புதியதாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு எல்லைச் சோதனையில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு கட்டாயமாகும். அதிகாரிகள் பயணிகள் முன்கூட்டியே கூடுதல் நேரத்தை திட்டமிட்டு செல்லும்படி பரிந்துரைக்கிறார்கள்.

ஐரோப்பிய பயண பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக Entry/Exit System கருதப்படுவதால், வருங்காலங்களில் இது அனைத்து முக்கிய நுழைவாயில்களிலும் சாதாரண நடைமுறையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© KeystoneSDA

Related Articles

Back to top button