Swiss News In Tamil

ஜெர்மன் தாக்குதல் குறித்து சுவிஸ் ஜனாதிபதி அதிர்ச்சி

ஜெர்மன் தாக்குதல் குறித்து சுவிஸ் ஜனாதிபதி அதிர்ச்சி – ஜெர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். ஹம்ஹார்ட் எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்மஸ் சந்தையில் கொள்வனவில் ஈடுபட்டிருந்த மக்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மக்களின் மீது வாகனத்தைச் மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை மம்றகோண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மன் தாக்குதல்

Related Articles

Back to top button