Swiss News In Tamil

சுவிஸ் ஏரிகளில் அதிகரிக்கும் வெப்பநிலை.!!

சுவிஸ் ஏரிகளில் அதிகரிக்கும் வெப்பநிலை.!!

சுவிஸ் ஏரிகளில் அதிகரிக்கும் வெப்பநிலை.!! மத்திய கோடை காலநிலை சுவிஸ் ஏரிகளின் வெப்பநிலையை அசாதாரண நிலைக்கு உயர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் நடுப்பகுதியில், கான்ஸ்டன்ஸ் ஏரியின் சராசரி வெப்பநிலை 25.8 டிகிரியாக இருந்தது. மேலும் 1983 இல் அளவீடுகள் தொடங்கியதிலிருந்து அதிகபட்ச வருடாந்திர வெப்பநிலையின் சராசரியை விட 3.5 டிகிரி அதிகமாக இருந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை Meteoschweiz அறிவித்தபடி, சூரிச் ஏரியும் ஆகஸ்ட் 16 அன்று அதிகபட்சமாக 26.6 டிகிரியை எட்டியயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வருடாந்திர வெப்பநிலையின் சராசரியை விட 3.5 டிகிரி அதிகமாகும்.

சுவிஸ் ஏரிகளில்
சுவிஸ் ஏரிகளில்

மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள ஏரிகள் இதே போன்ற வெப்பமான சூழ்நிலை நிலவியது. குளிர்ச்சியாக இருக்கும் லூசர்ன் ஏரி ஜூலை 31 அன்று 25.2 டிகிரியாக காணப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் சாலை போக்குவரத்து இறப்புகளை விட வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து செல்வதாக கடந்த யூலை மாதம் சுற்றுச்சூழலுக்கான பெடரல் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button