Swiss News In Tamil

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு இந்த வார இறுதியில் பிரான்ஸ்இ சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியில் வீசிய கடுமையான புயல்கள் மற்றும் அடைமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று பிரான்சின் வடகிழக்கு பகுதியில் 70 மற்றும் 80 வயதுகளில் உள்ள மூன்று பேர் பலத்த காற்றின் போது அவர்கள் பயணித்த கார் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் இறந்ததாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ்

நான்காவது பயணி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சுவிட்சர்லாந்தில், தென்கிழக்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் இறந்துள்ளனர். மற்றும் மூன்றில் ஒருவரை காணவில்லை என்று இத்தாலிய மொழி பேசும் டெசினோ மாகாண போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூர் நாளிதழான “லா ரீஜியோன்” குறிப்பிடுகையில், இறந்தவர்கள் அல்பைன் பகுதியில் விடுமுறைக்கு வந்த இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த வார இறுதியில் தென்கிழக்கு சுவிட்சர்லாந்திலும் கடும் மழை பெய்து, ஒருவர் உயிரிழந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

வலாய்ஸின் மேற்கு மண்டலத்தில், ரோன் மற்றும் அதன் துணை நதிகள் வெவ்வேறு இடங்களில் பெருக்கெடுத்து ஓடியதால், ‘பல நூறு’ மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், சாலைகள் மூடப்பட்டதாகவும் சிவில் பாதுகாப்பு சேவைகள் தெரிவித்தன.

கடந்த வார இறுதியில் தென்கிழக்கு சுவிட்சர்லாந்திலும் கடும் மழை பெய்து, ஒருவர் உயிரிழந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button