Swiss News In Tamil

கோத்தார்ட் சுரங்கப்பாதை செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்

கோத்தார்ட் சுரங்கப்பாதை செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்

கோத்தார்ட் சுரங்க ரயில்ப்பாதை செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2023 இல் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எனினும் செப்டம்பர் 2 ஆம் தேதிமுதல் மீண்டும் முழுமையாக செயல்படும் என்று சுவிஸ் தேசிய ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோத்தார்ட்

குறிப்பிட்ட திகதிக்குள், ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்துக்கும் டெசினோவுக்கும் இடையிலான ரயில்கள் முன்பு இருந்த அதே அளவில் மீண்டும் ஆரம்பிக்குப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, சுவிட்சர்லாந்திலிருந்து இத்தாலியின் நகரங்களுக்காக நேரடி ரயில்கள் மற்றும் ஜெர்மனிக்கான ரயில் இணைப்புகளும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.

‘பயணிகள் மீண்டும் சூரிச்சிலிருந்து லுகானோவிற்கு இரண்டு மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும். தற்போதைய மாற்று வழிகளை விட ஒரு மணி நேரம் குறைவாக’ இந்தப்பயணம் அமையும் எனவும் தேசிய ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button