சுவிஸ் ரயில்களில் விரும்பத்தகாத குரலில் வெளியாகும் அறிவிப்பு .!
சுவிஸ் ரயில்களில் விரும்பத்தகாத குரலில் வெளியாகும் அறிவிப்பு சுவிஸ் ஃபெடரல் ரயில்வே சமீபத்தில் அதன் ரயில் அறிவிப்புகளுக்கு டிஜிட்டல் குரலை அறிமுகப்படுத்தியது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இசபெல் அகஸ்டின் மற்றும் கரோல் ஃபெலிக்ஸ் ஆகியோரின் பழக்கமான குரல்களை தற்போது மாற்றியுள்ளது.
இருப்பினும், இந்த மாற்றம் பயணிகளால் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோபோ போன்ற புதிய குரல் நகரப் பெயர்களை தவறாக உச்சரிப்பதாகவும், வாக்கியங்களில் திடீரென இடைநிறுத்துவதாகவும், ஒட்டுமொத்தமாக இயற்கைக்கு மாறானதாக இருப்பதாகவும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சுவிஸ் ஃபெடரல் ரயில்வே கருத்து தெரிவிக்கையில் புதிய குரல் அமைப்பை மேம்படுத்த தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமும் இந்த சிக்கல்களைத் தீர்க்க உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”2″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]டிஜிட்டல் குரல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில ரயில்களில் மனித அறிவிப்புகள் இன்னும் இருக்கும் என்றும் சுவிஸ் ஃபெடரல் ரயில்வே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





