Swiss News In Tamil

சுவிஸில் இருதய நோய் மற்றும் புற்று நோயினால் அதிக மரணங்கள்

சுவிஸில் இருதய நோய் மற்றும் புற்று நோயினால் அதிக மரணங்கள்.!! சுவிட்சர்லாந்தில் இருதய நோய் மற்றும் புற்று நோய் போன்றவற்றினால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பதிவான மரணங்களில் அதிகளவானவை புற்று நோய் மற்றும் இருதய நோய்களினால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023ம் ஆண்டில் இருதய நோய்களினால் 28 வீதமானவர்களும் புற்று நோயினால் 24 வீதமானவர்களும் உயிரிழந்துள்ளனர். ஞாபக மறதி மற்றும் சுவாசப்பை பிரச்சினைகளினாலும் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இருதய நோய்

விபத்துக்கள் மற்றும் வன்முறைகளினால் 6 வீதமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button