Swiss News In Tamil

லுசேர்னில் சக்கரம் பூட்டிய சூட்கேஸ்களுக்கு தடை கோரும் எம்.பி.

லுசேர்னில் சக்கரம் பூட்டிய சூட்கேஸ்களுக்கு தடை கோரும் எம்.பி.

லுசேர்னில் சக்கரம் பூட்டிய சூட்கேஸ்களுக்கு தடை கோரும் எம்.பி. சுவிஸ் தேசிய சபையின் Lucerne  உறுப்பினர் டேவிட் ரோத், லுசேர்ன் நகரம் சுற்றுலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

லுசேர்ன் நகரம்  சுற்றுலா தொடர்பான பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான  பல பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அதன்படி நடைபாதைகளில் சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களை தடை செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எந்த நேரமும் கேட்கின்ற இதன் ஒலியால் எரிச்சல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய விடுதிகள் கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுள்ளார்.

மற்றொரு அல்லது அதே விடுதி இடிக்கப்பட்டால் மட்டுமே லுசர்னில் ஒரு விடுதி கட்ட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்பதிவு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், தனியார் அறைகளை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட அனுமதிக்கப்பட வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஆரோக்கியமான நிலைக்குக் குறைப்பதற்காக ஒரு இரவில் தங்குவதற்கான எண்ணிக்கையை ஒரு மில்லியனாகக் கட்டுப்படுத்தவும், அவர் ஆலோசனை முன்வைத்துள்ளார்.

மூலம் – Bluewin

Related Articles

Back to top button