Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய வகை பக்றீரியாக்களை கண்டு பிடித்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் நோயாளிகளிடமிருந்து இவ்வாறு 35 வகை புதிய பக்ரீறியாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த 35 வகை புதிய பக்ரீறியாக்களில் ஏழு பக்ரீறியாக்கள் மனித உடலில் தொற்றுக்களை உருவாக்கக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் நோயாளிகளிடமிருந்து திரட்டப்பட்ட பக்றீரியா மாதிரிகளின் அடிப்படையில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பேசல் பல்கலைக்கழகம் மற்றும் பேசல் பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியன கூட்டாக இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளன.

நோயாளிகளின் இரத்தம் மற்றும் திசுக்களில் அடையாளம் காணப்படாத 61 பக்ரீறியாக்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பக்ரீறியாக்களில் 35 புதிய பக்ரீறியாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button