Swiss News In Tamil

Glarus பகுதியில் இரு கார்கள் உடைக்கப்பட்டு திருட்டு

கன்டோன் கிளாருசில் இரு கார்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஏப்ரல் 20 சனிக்கிழமை நண்பகலில் இடம்பெற்றுள்ளது.

கிளாறுசில் உள்ள மொல்லிஸில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள்களே அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் உடைக்கப்பட்டன.

Glarus

வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டு வாகனத்தின் உள்ளே பொருட்கள் ஏதாவது உள்ளனவா என குறித்த நபர்களால் தேடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஒரு காரில் எந்தவித பொருட்களையும் காணாத குற்றவாளி மற்றொரு வாகனத்தில் உள்ள கார் ரேடியோவை அகற்றி சென்றுள்ளார்.

குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தெரிந்தால், 055 645 66 66 என்ற எண்ணில் Glarus கன்டோனல் காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்.

ஆதாரம்: Glarus Canton Police
Image source: Glarus Canton Police

Related Articles

Back to top button