Swiss News In Tamil

சுவிஸ் போலீசாரால் 3 தீவிரவாத இளைஞர்கள் கைது

சுவிஸ் போலீசாரால் 3 தீவிரவாத இளைஞர்கள் கைது தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை சுவிஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

15, 16 மற்றும் 18 வயதுடைய மூவரும் ஷாஃப்ஹவுசன் மற்றும் துர்காவ் மாகாணங்களில் கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

சுவிஸ் போலீசாரால் 3 தீவிரவாத இளைஞர்கள் கைது

அவர்கள் சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ISIS அமைப்புடன் தொடர்புகளை பேணி ‘கொலை செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் எந்த கூடுதல் விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இளைஞர்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது வழக்கு இது என தெரிவித்துள்ளார்கள்.

மார்ச் மாத தொடக்கத்தில், சூரிச்சில் ஒரு யூத மனிதரைக் கொன்றதற்காக 15 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button