Zurich Sechseläuten நிகழ்வு என்றுமில்லாதவாறு ஒத்திவைப்பு
Zurich Sechseläuten நிகழ்வு என்றுமில்லாதவாறு ஒத்திவைப்பு சூரிச்சில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால ஆரம்பமான ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் மாபெரும் நிகழ்வு செக்செலூட்டன் என்கின்ற நிகழ்வு.
இதில் போக் என்கின்ற ஒரு பிரமாண்டமான பொம்மை வருடா வருடம் எரிக்கப்பட்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.
வழமை போன்று இந்த ஆண்டுக்குரிய விழா இன்று சூரிச்சில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள குதிரை அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

போக் பனிமனிதனை எரிக்கும் அந்த காட்சிகளை காணவந்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியது. காலநிலை சீர்கேடுகள் காரணமாக இதுவரை காலமும் இல்லாமல் இன்று போக் மனிதனை எரியூட்டும் நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இம்முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 1923 ம் ஆண்டுதான் போக் மனிதன் எரிக்கப்படவில்லை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சிலர் சூரிச்சின் வேறு ஒரு இடத்திற்கு போக் மனிதனை மாற்றி எரியூட்ட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்கள். எது எவ்வாறாயினும் வருடாவருடம் எரியூட்டப்படும் போக் மனிதனை கண்டுவந்த சுவிட்சர்லாந்து மக்களுக்கு, முக்கியமாக சூரிச் வாழ் மக்களுக்கு இவ்வருடம் ஏமாற்றமே கிடைத்துள்ளது.





