Swiss News In Tamil
சுவிஸ் ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்
சுவிஸ் ரயில் நிலையமொன்றில், உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்
ஞாயிற்றுக்கிழமை காலை, சுவிட்சர்லாந்தின் Lausanne ரயில் நிலையத்துக்கருகில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபல ஊடகமான Blick செய்தித்தாள் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ரயில்வே நடைமேடையில் இரத்தக்கரை காணப்படும் காட்சிகள் அந்த செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொலிசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து சோதனை நடத்திவரும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
உள்ளாடைகளை மண்ணில் புதையுங்கள் – சுவிஸ் அரசாங்கம் வேண்டுகோள்
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.





