Swiss News In Tamil

சுவிஸ் உரிமத் தகடு கொண்ட பெராரி கார் பயங்கர விபத்து இருவர் பலி!!

வடக்கு இத்தாலியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் உரிமத் தகடு கொண்ட ஃபெராரி கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Ivrea மற்றும் Santhià இடையேயான பாதையில் Piedmont இல் கார் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஸ்போர்ட்ஸ் கார் ஒரு சுரங்கப்பாதைக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே பாதையின் தடுப்பு கம்பியில் மோதியதாக அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் பிற மீட்பு பணியாளர்கள் விரைந்துள்ளதோடு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source:-  www.blick.ch

Related Articles

Back to top button