Swiss News In Tamil

ஈஸ்டர் வார இறுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்

ஈஸ்டர் வார இறுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சுவிஸ் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுவிஸ் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் பாதைகளில், வாகனங்கள் மிகநீண்ட வரிசையில் காத்திருக்கு வேண்டியேற்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக A2 கொத்தார்ட் சுரங்கப்பாதை மற்றும் A 13 சான் பெர்னாடினோவை நோக்கி இந்த வாகனநெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆல்ப்ஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமைகள் இன்னும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Back to top button