Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் 36 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்

சுவிட்சர்லாந்தில் 36 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்,!! சுவிட்சர்லாந்தில் 36 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார் ஒருவர். கடைசியாக பொலிசார் அவரைக் கண்டுபிடித்தபோது அவர் உயிருடன் இல்லை!

36 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்

சுவிட்சர்லாந்திலுள்ள Jura மாகாணத்தைச் சேர்ந்தவரான ஒரு பிரபல கால்பந்தாட்ட வீரர், பின்னர் வங்கிக்கொள்ளை ஒன்றில் ஈடுபட்டார். அப்போது பலரைத் தாக்கிய அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து தப்பி மீண்டும் பல கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டு சிறையிலடைக்கப்பட்ட அவர், மீண்டும் 1988ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பினார்.

பிறகு 36 ஆண்டுகளாக அவர் தலைமறைவாகவே இருந்தார். தற்போது 71 வயதாகும் நிலையில், சமீபத்தில் அவரது உயிரற்ற உடல் Jura மாகாணத்திலுள்ள அவரது சொந்த ஊரில், ஒரு ரயில் பாதையருகே கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் ரயில் விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது. விடயம் என்னவென்றால், தனது வாழ்நாளில் அவர் 3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளைக் கொள்ளையடித்துள்ளார். அவரோ, அவர் கொள்ளையடித்த பணமோ கடைசிவரை சிக்கவேயில்லை.

Related Articles

Back to top button