Swiss News In Tamil

சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்திற்கு குவியும் தொலைபேசி அழைப்புகள் : வெளியான காரணம்

சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்திற்கு குவியும் தொலைபேசி அழைப்புகள் : வெளியான காரணம்

சுவிஸ் வெளியுறவு அமைச்சக தொலைபேசிகள் கடந்த சில மாதங்களாக ஓயாமல் ஒலித்தவண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதம், சுவிஸ் நாட்டுப் பெண்ணொருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குப் பயணிப்பது தொடர்பான பயண ஆலோசனைகளை சுவிஸ் அரசு கடுமையாக்கியது.

அந்த விடயம், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் சுவிஸ் குடிமக்களுக்கு கவலையை ஏற்படுத்த, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் ஆலோசனை கேட்பதற்காக அவர்கள் சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்புகொண்டு விசாரித்துவருகிறார்கள்.

Swiss Foreign Ministry

இப்படி வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்துவரும் சுவிஸ் குடிமக்களின் எண்ணிக்கை, மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுவிஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் சுவிஸ் குடிமக்கள், முன்கூட்டியே அமெரிக்க தூதரகத்தை தொடர்புகொண்டு, அமெரிக்காவுக்குச் செல்வதற்கு என்னென்ன விடயங்கள் தேவை என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படி அமெரிக்கா செல்வதற்கு அந்நாடு விதித்துவரும் கட்டுப்பாடுகள், சுற்றுலா மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆம், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் சுவிஸ் குடிமக்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 26 சதவிகிதம் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button