Swiss News In Tamil
சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாகக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு | Suitcase Was Found In A Swiss Town
சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாகக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு உருவான நிலையில், அதை சோதிக்க ரோபோ ஒன்றைக் கொண்டுவந்தார்கள் பொலிசார்.
அநாதரவாகக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Plainpalais என்னுமிடத்தில், சூட்கேஸ் ஒன்று அநாதரவாகக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அந்தப் பகுதியை அடையும் தெருக்களில் மக்கள் நடமாட தடை விதித்தனர். நேற்று மாலை, சுமார் ஒரு மணி நேரத்துக்கு அந்த பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
பொலிசார் ரோபோ ஒன்றைக் கொண்டு அந்த சூட்கேசை சோதித்தபோது, அதில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த பொருளும் இல்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த பகுதியில் நடமாட மக்களுக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது.





