Swiss News In Tamil

சூரிச்சில் படிக்கட்டில் இறந்து கிடந்த முதியவர் : சந்தேக நபர் கைது

1சூரிச்சில் படிக்கட்டில் இறந்து கிடந்த முதியவர் : சந்தேக நபர் கைது கடந்த சனிக்கிழமை சூரிச் மௌவரில் இடம்பெற்ற ஒரு கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சூரிச் கன்டோனல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிப்ரவரி 24, 2024, மௌவரில் ஒரு படிக்கட்டில் 71 வயதான நபர் ஒருவர் இறந்து கிடந்தார். மதியம் 12 மணிக்குப் பிறகு, ஒரு வீட்டின் வெளிப்புற படிக்கட்டில் நபர் ஒருவர் அசைவில்லாமல் கிடப்பதாக ஒரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் பணியாளர்கள் சோதனை செய்து பார்த்து போது அவர் உயிர்பிரிந்திருந்தது. மரணத்திற்கான காரணம் தொடர்பாக சூரிச் கன்டோனல் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

சூரிச்சில்

இதனடிப்படையில் 38 வயதான சுவிஸ் நபர் ஒருவரைக் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணைகளில் குற்றவாளியும், இறந்தவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது தெரியவந்தது. எனினும் குற்றத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள, குறித்தநபர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Quelle: Kantonspolizei Zürich
Titelbild: Symbolbild © Kantonspolizei Zürich

Related Articles

Back to top button