Swiss News In Tamil

ரயில் நிலையத்தில் முதியவர் மீது தாக்குதல் : இருவர் கைது

ரயில் நிலையத்தில் முதியவர் மீது தாக்குதல் : இருவர் கைது சென்ட்காலன் ரோர்சாக் ரயில் நிலையத்தில் 82 முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரயிலுக்காக காத்திருப்பு அறையில் இருந்த முதியவரிடமே குறித்த கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொராக்கோவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களான இரண்டு குற்றவாளிகள் முதியவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த விலைமதிப்புள்ள பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள். இதனால் காயமடைந்த முதியவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தாக்குதல் நடத்தியவர்கள் ஓடும் திசையை அவதானித்த சிலர் போலீசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அவர்களை பின்தொடர்ந்த போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 25 வயது மற்றும் 48 வயதான ஆண்கள் இருவரும் மொராக்கோ நாட்டைச்சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பதும் அவர்கள் சென்ட்காலன் கன்டோனில் வசிப்பவர்கள் இல்லை என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆதாரம்: Kapo St.Gallen

 

Related Articles

Back to top button