Swiss News In Tamil

சுவிட்சர்லாநதில் Netflix விடும் தவறு : பார்வையாளர்கள் விசனம்

சுவிட்சர்லாநதில் Netflix விடும் தவறு : பார்வையாளர்கள் விசனம்

சுவிட்சர்லாநதில் Netflix விடும் தவறு : பார்வையாளர்கள் விசனம் பிரபல ஆன்லைன் Streming சேவையான Netflix தொடர்ச்சியான சில தவறுகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Netflix ஆனது அதன் புதிய ஆவணப்படத் தொடரான ​​”Pop Star Academy” இல், இரண்டு சுவிஸ் நகரங்களான சூரிச் மற்றும் லூசெர்னைக் குழப்பி ஒரு தவறிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் சூரிச் என்று குறிப்பிடப்படும் இடங்களில் லூசர்னின் காட்சிகளைக் காட்டியது. இரண்டு நகரங்களிலும் உள்ள மக்கள் உடனடியாக பிழையை கவனித்தனர்.

Netflix சுவிஸ் புவியியலை தவறாகப் புரிந்துகொள்வது அல்லது காட்சிப்படுத்துவது இது முதல் முறை அல்ல எனவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Netflix

FIFA பற்றிய மற்றொரு ஆவணப்படத்தில், மாண்ட்ரீக்ஸுக்கு அருகிலுள்ள ஜெனீவா ஏரியை சூரிச்சின் ஒரு பகுதியாக அவர்கள் பெயரிட்டனர், அதுவும் தவறானது.

எது எப்படியோ குறைந்த பட்சம் Netflix இருப்பிடங்களை ஸ்விட்சர்லாந்தில் உள்ளதாகக்  குறிப்பிட்டதே பெரிய விடயம் எனவும் சுவிட்சர்லாந்துக்கு பதிலாக சுவீடன் என்று குறிப்பிடாமல் இருந்தால் சரிதான் எனவும் பார்ரவயாளர்கள் கேலி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button