Swiss News In Tamil

சூரிச் கன்டோனில் வீட்டினுள் புகுந்து பணம், நகை கொள்ளை

சூரிச் கன்டோனில் உள்ள ஹெர்லிபெர்க்கில் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்த வேளையிலையே இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

zurich polizei

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளதாகவும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பிராங்க் மதிப்புள்ள பணம்இ நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சூரிச் தடயவியல் நிறுவனத்தின் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை திரட்டியுள்ளார்கள். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

Related Articles

Back to top button