Swiss News In Tamil
சூரிச்சிக்கான விமான சேவையை ரத்து செய்த ஓமான் விமான சேவை
சூரிச்சிக்கான விமான சேவையை ரத்து செய்த ஓமான் விமான சேவை சூரிச், இஸ்லாமபாத், லாகூர், கொழும்பு மற்றும் சிட்டாங்கொங் ஆகிய நகரங்களுக்கான நேரடி விமான சேவையை ஓமான் விமான சேவை நிறுவனம் நிறுத்தியுள்ளது.
லக்னோவ் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓமான் விமான சேவை நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமான சேவை வலையமைப்பில் மூலோபாய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. சில இடங்களுக்கான விமான பயணங்களில் நேர மாற்றம் செய்பய்பட்டுள்ளது.
சந்தை நிலைமைகள், கேள்வி, நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விமான சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.





