Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து – ஜேர்மன் இடையிலான ரயில் சேவைகள் பாதிப்பு.!!

சுவிட்சர்லாந்து – ஜேர்மன் இடையிலான ரயில் சேவைகள் பாதிப்பு.!!ஜேர்மன் ரயில் சாரதிகள் இன்று வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாக சுவிஸ் ரயில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அல்லது வியாழனன்று ஜெர்மனிக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டால் இதை மறுபரிசீலனை செய்யுமாறும் பயணிகளடத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து

ஏனென்றால் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மாலை 6 மணி வரை இரு நாடுகளுக்கும் இடையிலான பல எல்லை தாண்டிய ரயில் இணைப்புகள் ரத்து செய்யப்படும்.

இருப்பினும், சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில் போக்குவரத்து அமைப்பின் கூற்றுப்படி ‘ரத்துசெய்யப்பட்ட சுவிட்சர்லாந்திற்கான ரயில் சேவைகளில் நேரஅட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகள் பின்பற்றப்படுவதாகவும்’அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button