Swiss News In Tamil

சூரிச்சின் பொது போக்குவரத்து பற்றி வெளியான தகவல்.!

சூரிச்சின் பொது போக்குவரத்து பற்றி வெளியான தகவல்.! சூரிச்சின் பொதுப் போக்குவரத்து உலகிலேயே சிறந்ததாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் மிகப் பிரபல்யமான நகரமான சூரிச்சில் அங்கு இடம்பெறும் பொது போக்குவரத்து தொடர்பாக அண்மையில் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சூரிச், பொது போக்குவரத்து, தகவல்

இது ஒட்டுமொத்தமாக 65 நகரங்களில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நகரமும் அதன் பொதுப் போக்குவரத்தின் ‘அடர்த்தி, செயல்திறன் மற்றும் பயன்பாட்டு விகிதம்’ ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், உலகளவில் 2வது இடத்தையும் – ஐரோப்பாவில் முதல் இடத்தையும் சூரிச் பொதுப்போக்குவரத்து பெற்றுள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தத்தில், சூரிச் குடியிருப்பாளர்கள் 60 க்கும் மேற்பட்ட வெவ்வேறு டிராம், ரயில் மற்றும் பேருந்து வழித்தடங்களில் போக்குவரத்து செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button