சுவிட்சர்லாந்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு.! சுவிட்சர்லாந்தில் மின்சார கார்களைத் தேர்ந்தெடுப்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆண்டில் சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் ஐந்தில் ஒரு புதிய வாகனம் எலக்ரிக் வாகனமாகவே காணப்படுகிறது.
ஒரு வருடத்தில் அவர்களின் சந்தைப் பங்கு 17.3ல் இருந்து 20.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று சுவிஸ் ஈமொபிலிட்டி அமைப்பு (Swiss eMobility organization) இந்த வாரம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பெட்ரோலில் இயங்கும் கார்களை விட மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு சிறந்தது என்றாலும், அவற்றின் உரிமையாளர்கள் சில சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று சுவிஸ் ஈமொபிலிட்டி தெரிவித்துள்ளது.
ஒன்று, சுவிட்சர்லாந்தில் பொது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை அதிகமான அளவு இருந்தாலும், தனியார் சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில் பல நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்களை சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு சவால் என்னவென்றால், இவ்வருடம் ஜனவரி 1 திகதி முதல், எலக்ரிக் வாகனங்களுக்கு 4 சதவீத இறக்குமதி வரி செலுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





