திருடிவிட்டு தப்ப முயன்ற சந்தேகநபர்… சில நிமிடங்களில் கைது செய்த சுவிஸ் போலீஸ்!
திருடிவிட்டு தப்ப முயன்ற சந்தேகநபர்... சில நிமிடங்களில் கைது செய்த சுவிஸ் போலீஸ்!

திருடிவிட்டு தப்ப முயன்ற சந்தேகநபர்… சில நிமிடங்களில் கைது செய்த சுவிஸ் போலீஸ்!
பேசல்-லாண்ட்ஷாஃப்ட் மாகாணத்தின் டெக்னாவு Tecknauபகுதியில் உள்ள கார் விற்பனையகத்தில் நடைபெற்ற நள்ளிரவு திருட்டுச் சம்பவம் தொடர்பாக, 25 வயதுடைய பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில், டெக்னாவுவின் கேஸ்லியாக்கர் பகுதியில் அமைந்துள்ள கார் விற்பனையகத்தில் திருட்டு நடந்ததாக அவசர தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த ரோந்து காவல்துறையினர், கட்டிடத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான தெளிவான ஆதாரங்களை கண்டறிந்தனர்.

இதையடுத்து, விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், டெக்னாவு ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பிரெஞ்சு நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், பேசல்-லாண்ட்ஷாஃப்ட் அரசு வழக்கறிஞர் அலுவலகம், அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணை முடியும் வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நபர் வேறு திருட்டு அல்லது கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்புடையவரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.





