சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் திறக்கும் மொரெட்டி உணவகங்கள்… பின்னணியில் என்ன காரணம்?
சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் திறக்கும் மொரெட்டி உணவகங்கள்... பின்னணியில் என்ன காரணம்?

சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் திறக்கும் மொரெட்டி உணவகங்கள்… பின்னணியில் என்ன காரணம்?
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மொரெட்டி தம்பதியினரின் ‘லெ சென்சோ’ மற்றும் ‘லெ வியூ ஷாலே’ உணவகங்கள் Le Senso und Le Vieux Chalet.மீண்டும் திறக்கப்பட உள்ளதாக, அவர்களது வழக்கறிஞர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பும் விவாதமும் எழுந்தது. இதையடுத்து, மொரெட்டி தம்பதியினரின் சட்டப் பிரதிநிதிகள் விளக்கமளித்துள்ளனர்.
அவர்களது விளக்கத்தின்படி, உணவகங்களை மீண்டும் திறப்பதன் நோக்கம் வணிகத்தை வழக்கம்போல் நடத்துவது அல்ல. மாறாக, வரவிருக்கும் திவால்நிலையைத் தவிர்த்து, அந்தச் சொத்துக்களைப் பாதுகாப்பதன் மூலம் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வாய்ப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும்.

இதற்காக, உணவகங்களின் நிர்வாகம் ஒரு மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் புதிய நிறுவனம் ஒன்றின் கீழ் செயல்படுத்தப்படும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த முடிவு துயரச் சம்பவத்தை கேலி செய்வதற்காக அல்ல என்றும், மனிதநேய ஒற்றுமையைத் தொடரும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், உணவகங்களின் எதிர்கால லாபம் முழுவதும் ‘லெ கான்ஸ்டலேஷன்‘ தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சர்ச்சையை அடக்குமா, அல்லது மேலும் புதிய கேள்விகளை எழுப்புமா என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.





