Local Swiss News

சுவிட்சர்லாந்தின் எதிர்காலம் ஆபத்திலா? குழந்தைகள் குறைவதற்கான உண்மை காரணங்கள் வெளியானது!

சுவிட்சர்லாந்தின் எதிர்காலம் ஆபத்திலா? குழந்தைகள் குறைவதற்கான உண்மை காரணங்கள் வெளியானது!

“சுவிட்சர்லாந்தின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதற்கான உண்மையான காரணங்களை புதிய ஆய்வு ஒன்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.”

நாட்டில் மக்கள்தொகையை நிலைநிறுத்தவும், வயதான மக்கள்தொகை அதிகரிப்பதைத் தடுக்கவும் அதிக குழந்தைகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், பலர் நினைப்பது போல பணப் பிரச்சினை மட்டுமே இதற்குக் காரணம் இல்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

முதல் காரணமாக, மேலும் மேலும் பலர் குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்பவில்லை என்பதைக் குறிப்பிடுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், குழந்தை பெற விருப்பமில்லாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தனிப்பட்ட சுதந்திரம், எதிர்காலம் குறித்த கவலை மற்றும் பெற்றோர் பொறுப்பு பற்றிய தயக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இரண்டாவது காரணம், கருவுறுதல் சிகிச்சைகளின் அதிக செலவு. சுவிட்சர்லாந்தில் ஒரு IVF சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கான சுவிஸ் ஃபிராங்குகள் செலவாகின்றன. இதற்கு போதுமான காப்பீட்டு உதவியும் இல்லை.

a18 7

மூன்றாவது காரணமாக, சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கருமுட்டை தானம் போன்ற பல இனப்பெருக்க சிகிச்சைகள் இன்னும் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நான்காவது காரணம், கருவுறுதல் திறன் குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாதது. வயது அதிகரிப்பதால் கருவுறுதல் திறன் குறைவது மற்றும் வாழ்க்கை முறையின் தாக்கம் குறித்து பலர் இன்னும் தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர்.

ஐந்தாவது மற்றும் முக்கியமான காரணம், குழந்தைப்பேறின்மை பெண்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை என்ற தவறான எண்ணம்.

ஆய்வின்படி, குழந்தைப்பேறின்மைக்கு ஆண்களும் பெண்களும் சம அளவில் காரணமாக இருக்கக்கூடும். இருந்தாலும், சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுகுவது பெரும்பாலும் பெண்கள்தான்.

பிறப்பு விகிதம் குறைவது என்பது குடும்பங்களின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல… அது சுவிட்சர்லாந்தின் எதிர்கால பொருளாதாரம், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் சமூக அமைப்பையே பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button