ராய்பைசென் நிதி மோசடி வழக்கு அடுத்தகட்டம்! வின்சென்ஸ் எதிர்கொள்ளும் புதிய சவால்!
ராய்பைசென் நிதி மோசடி வழக்கு அடுத்தகட்டம்! வின்சென்ஸ் எதிர்கொள்ளும் புதிய சவால்!

ராய்பைசென் நிதி மோசடி வழக்கு அடுத்தகட்டம்! வின்சென்ஸ் எதிர்கொள்ளும் புதிய சவால்!
ராய்பைசென் நிதி விவகாரம் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல், சூரிச் உயர் நீதிமன்றத்தில் ராய்பைசென் வங்கியின் முன்னாள் தலைவரான பியரின் வின்சென்ஸ், அவரது முன்னாள் வர்த்தகப் பங்குதாரர் பீட் ஸ்டாக்கர் உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகள் மீதான மேல்முறையீட்டு விசாரணை நடைபெறவுள்ளது.
முதல் விசாரணையில், வின்சென்ஸ் மற்றும் ஸ்டாக்கர் ஆகிய இருவரும் கடுமையான நம்பிக்கை மீறல், மோசடி, கையாடல் உள்ளிட்ட பல குற்றங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருவருக்கும் நானரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் வின்சென்ஸின் தண்டனை மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்களாகவும், ஸ்டாக்கரின் தண்டனை நான்கு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில், இருவரும் தங்களது நடவடிக்கைகள் மூலம் 25 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான லாபத்தைப் பெற்றதாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், அரசுத் தரப்பு இருவருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியிருந்தது.
இந்நிலையில், குற்றப்பத்திரிகையின் நீளம் மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன.
முக்கியமாக, இந்த வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி கிறிஸ்டியன் பிரின்ஸ் எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார் என்பதும் கவனம் பெற்றுள்ளது.
எனினும், மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை, வின்சென்ஸ் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டப்படி நிரபராதிகள் என்றே கருதப்படுகின்றனர்.





