ஒரே நேரத்தில் இத்தாலிலியும் சுவிசிலும் வேலைசெய்த ஆசாமி சிக்கினார்
ஒரே நேரத்தில் இத்தாலிலியும் சுவிசிலும் வேலைசெய்த ஆசாமி சிக்கினார்

ஒரே நேரத்தில் இத்தாலிலியும் சுவிசிலும் வேலைசெய்த ஆசாமி சிக்கினார்
இத்தாலியின் வரேசே (Varese) மாகாணத்தைச் சேர்ந்த நகராட்சி ஊழியர் ஒருவர், அதிகாரப்பூர்வ பணிநேரத்தில் இத்தாலியிலும் சுவிட்சர்லாந்திலும் ஒரே நேரத்தில் வேலை செய்ததாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது இத்தாலியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
விசாரணை தகவல்களின்படி, குறித்த ஊழியர் முதலில் இத்தாலியில் உள்ள தனது நகராட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் உடனடியாக சுவிட்சர்லாந்தின் டிசினோ கன்டோனில் (Tessin) உள்ள தனது மற்றொரு பணியிடத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியை சந்தேகித்த இத்தாலிய விசாரணையாளர்கள், கண்காணிப்பு கமெராக்கள் மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு பதிவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்படி, அந்த ஊழியர் முதலில் நகராட்சி வாகனத்தில் அலுவலகத்துக்கு சென்று தனது வருகையை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வாகனத்தை நகராட்சி கிடங்கில் நிறுத்திவிட்டு, தனது சொந்த காரில் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், அவர் இத்தாலியில் அதிகாரப்பூர்வ பணியில் இருப்பதாக பதிவுகளில் காட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், குறித்த ஊழியருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதிகளில் வாழும் பலர் இரு நாடுகளுக்கிடையில் தினசரி வேலைக்காக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ பணிநேரத்தை தவறாக பயன்படுத்தி இரட்டை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது இந்த சம்பவத்தை விசேட கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
© KeystoneSDA





