ஜெனீவாவில் கைதி தப்பியோட்டம்: ஆம்புலன்ஸில் இருந்து குதித்து தப்பினார் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கைதி மாற்று நடவடிக்கையின் போது அதிர்ச்சியூட்டும் தப்பியோட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருபதுகளில் இருக்கும் கைதி ஒருவர், நகர்ந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கைதி, La Brenaz prison சிறையிலிருந்து Geneva University Hospital மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த தப்பியோட்டம் நிகழ்ந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டாலும், தப்பியோடிய நபர் வன்முறை தன்மை கொண்டவராக இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அவர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதால், போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, போலீஸ் கண்காணிப்பு அமைப்பு தனிப்பட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. கைதி எவ்வாறு பாதுகாப்பை மீறி தப்பினார் என்பது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 2016 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்ததை அடுத்து, கைதிகளை மாற்றும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சமீபத்திய சம்பவம், சுவிட்சர்லாந்தில் கைதி மாற்று நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது. போலீசார் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாவது, சந்தேகத்திற்கிடமான நபரை கண்டால் உடனடியாக தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ©WRS