Swiss Tamil Events

சுவிஸ் நிட்வால்டன் மாநில தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்வு

சுவிஸ்ன் நிட்வால்டன் மாநில தமிழர்களால் தமது அடுத்த தலைமுறையினர்க்கு தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

தமிழர்களின் சிறப்புக்களையும் அது கொண்டாடப்படவேண்டிய முறை மற்றும் முக்கியத்துவத்தினை எடுத்தியம்பும் விதமாக ஓர் காட்சிப்படுத்தல் பொங்கல் நிகழ்வு நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.

22 61e44507b70bb

நிட்வால்டன் தமிழர் ஒன்றிய தலைவர் திரு மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் கல்விச்சேவை ஆசிரியர் ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஒன்றியத்தின் உபதலைவர் திரு க.கலைவேந்தன் வரவேற்று வாழ்த்துரை வழங்க சிறப்புவிருந்தினரால் தமிழர் மொழி கலை கலாச்சரத்தின் முக்கியத்துவம் சார்ந்து சிறப்புரையாற்றப்பட்டது.

நிட்வால்டன் இளையோர்களின் சிறப்பான கலை நிகழ்வுகளை தொடர்ந்து செயளாளர் திரு மா.ராஜீவன் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button