Swiss News In Tamil

பேர்ன் மாநிலத்தில் இடம்பெற்ற பல்சமயங்களின் இரவு நிகழ்வு.!!

சைவநெறிகூடம்பேர்ன் மாநிலத்தில் இடம்பெற்ற பல்சமயங்களின் இரவு நிகழ்வு.!!

பேர்ன் மாநிலத்தில்  பல்சமயங்களின் இரவு என்ற ஒரு நிகழ்வு 2008 முதல் நடைபெற்றுவருகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் நளித்திங்கள் (நவம்பர் மாதம்) நடைபெறும்.

வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் உலகக் கண்ணோட்டங்களைச் சேர்ந்த மக்களை உரையாட அழைக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்து வந்துள்ளது. இந்த ஆண்டு பேர்ன் மாநிலத்தின் ஆட்சி அடையாளமாக விளங்கும் மன்றுள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

29 சமய அமைப்புக்கள் பங்கெடுத்து கொண்ட இந்நிகழ்வில் சைவநெறிக்கூடம் பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மண்டபத்தில் மெனோனேற்று சபையுடன் இணைந்து  குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேர்ன் மாநிலத்தில் 465579030 987504990068025 5355642264054325225 n 465108747 987505530067971 2814106467927688161 n

„என் குரல், உன் குரல், எங்கள் உலகம்” – குரல்களின் உரையாடல்“

09.11.2024 சனிக்கிழமை 🕗 20.00 மணி தொடக்கம் 21.30 மணி வரை குறித்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பல் சமய இல்லத்துடன் இணைந்து ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் பல்சமயங்களின் இரவு நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் இசையுடன் இசையுடன் வரவேற்கப்பட்டு பின்னர் உரை மன்று நிகழ்வு தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சைவநெறிக்கூடத்தின் சார்பாளர்களும் பேர்ன் மென்னோனேற்று சபை
(பழைய பிரிவினர்) சமயத்தினரும் நிகழ்வுகளை நடாத்தியிருந்தனர்.

ஈழத்தமிழ்க் கலை வரவேற்பு நடனம், சைவசமயத்தவரும் மெனோனேற்று சபையைச் சேர்ந்த இளவயதினரும் குறித்த உரை போன்றன இடம்பெற்றிருந்தன.

Photos (c) சைவநெறிக்கூடம்

 

Related Articles

Back to top button