Swiss News In Tamil

சுவிசிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

சுவிசிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

சுவிசிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பம் குளிர்கால வருகையையொட்டி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து புதிய விமானம் நவம்பவம் 1ம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 330 வகை விமானமே இலங்கையை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று காலை 09.20 மணியளவில் Edlewise Airlines இன் W.K.-68 என்ற இந்த விமானத்தில் 17 வணிக வகுப்பு பயணிகளும் 221 பொருளாதார வகுப்பு பயணிகளும் இதர 13 பணியாளர்களும் என 251 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சுவிசிலிருந்து Screenshot 2024 11 01 112335 Screenshot 2024 11 01 112353

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சூரிச்சில் இருந்து புறப்பட்டு, நேரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானம், அன்றைய தினம் காலை 10.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை 10.05 மணிக்கு  மாலைதீவு வழியாக சூரிச்சுக்குத் திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிச்சிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர்கால விமான சேவையின் விமானங்கள் 2025 மே மாதம் வரை இயக்கப்படும்.

Related Articles

Back to top button