Swiss News In Tamil

சுவிஸ் ஏரி ஒன்றில் கிருமிகள்… நீந்துவதற்கு விதிக்கப்பட்ட தடை

சுவிஸ் ஏரி ஒன்றில் கிருமிகள்… நீந்துவதற்கு விதிக்கப்பட்ட தடை

சுவிட்சர்லாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ள ஜெனீவா ஏரியில் கிருமிகள் கலந்திருப்பதால் ஏரியின் சில பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நீர் நிலையில் “ஈ கோலை” போன்ற கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நீர் நிலையில் மனிதக் கழிவுகள் கலந்துள்ளன என்று பொருள்.

இந்நிலையில், ஜெனீவா ஏரியில் இந்த ஈ கோலை கிருமிகள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளதை ஜெனீவா மாகாண சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது.

25 68415f66be459

விமான நிலையத்தின் அருகே கட்டுமானப்பணியின்போது கழிவுநீர்க் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டதே ஏரியில் கழிவு நீர் கலக்கக் காரணம் என தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து கழிவு நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், Vengeron மற்றும் Pregny-Chambésy ஆகிய இடங்களில் ஏரியில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button