டிரம்பின் அடுத்த அதிரடி என்ன? சுவிஸ் பொருட்களுக்கு புதிய வரி அறிவிப்பு நெருங்குகிறது!
டிரம்பின் அடுத்த அதிரடி என்ன? சுவிஸ் பொருட்களுக்கு புதிய வரி அறிவிப்பு நெருங்குகிறது!

டிரம்பின் அடுத்த அதிரடி என்ன? சுவிஸ் பொருட்களுக்கு புதிய வரி அறிவிப்பு நெருங்குகிறது!
சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி துறையை பாதிக்கக்கூடிய முக்கிய அறிவிப்பை அமெரிக்கா விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், சுவிஸ் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய இறக்குமதி வரி குறித்து அதிகபட்சம் வெள்ளிக்கிழமைக்குள் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, குறைந்தபட்சமாக 12.5 சதவீத வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, சில தகவல்களின்படி இந்த வரி 25 சதவீதம் வரை உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

முன்னதாக, டிரம்ப் சுவிஸ் பொருட்களுக்கு 31 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போதைய இடைக்கால ஏற்பாடுகள் முடிவடையும் நிலையில், புதிய வரி அமைப்பு அமலுக்கு வர உள்ளது.
இதற்கிடையில், சுவிஸ் அரசு வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில வர்த்தகச் சலுகைகளை முன்வைத்திருந்தாலும், அதற்குப் பதிலாக எந்த உறுதியான உத்தரவாதமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த முடிவால் மருந்துத் தொழில், கைக்கடிகார உற்பத்தி உள்ளிட்ட பல முக்கிய ஏற்றுமதி துறைகள் நேரடியாக பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, உலக வர்த்தக சந்தையின் கவனமும் தற்போது இந்த அறிவிப்பின் மீது திரும்பியுள்ளது.





