Local Swiss News

சில வினாடிகள் தாமதம்… ஆனால் பெரிய அபராதம்! SBB மீது பயணிகள் அதிருப்தி…

சில வினாடிகள் தாமதம்... ஆனால் பெரிய அபராதம்! SBB மீது பயணிகள் அதிருப்தி...

சில வினாடிகள் தாமதம்… ஆனால் பெரிய அபராதம்! SBB மீது பயணிகள் அதிருப்தி…

சுவிட்சர்லாந்தில் SBB ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை. ரயில் புறப்பட்ட சில வினாடிகளுக்குப் பிறகு டிக்கெட் வாங்கினால்கூட, அபராதம் விதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தகவலின்படி, பல பயணிகள் ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடும் சூழ்நிலையில், ரயில் புறப்பட்ட உடனேயே மொபைல் மூலம் டிக்கெட் வாங்குகிறார்கள். ஆனால் SBB-யின் விதிப்படி, டிக்கெட் ரயில் புறப்படுவதற்கு முன்பே வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

இதனால், சில விநாடிகள் தாமதமாக டிக்கெட் வாங்கியிருந்தாலும், பரிசோதனையின் போது அது செல்லுபடியாகாது என்று கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒரு பயணி, இணையம் சரியாக செயல்படாததால் டிக்கெட் வாங்க தாமதமானது. அதை நேரடியாக பரிசோதகரிடம் விளக்கிய பிறகும் அபராதம் விதிக்கப்பட்டது என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

19j 8

இதற்கு பதிலளித்துள்ள SBB, ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக பரிசீலிக்கப்படுவதாகவும், தங்களுக்கு அநியாயம் நடந்ததாக யாரேனும் கருதினால், நேரடியாக SBB-யை தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம், டிக்கெட் விதிகளில் மனிதநேய அணுகுமுறை தேவையா? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

எனவே, SBB ரயிலில் பயணம் செய்யும் முன், ரயில் நகர்வதற்கு முன்பே உங்கள் டிக்கெட்டை உறுதியாக வாங்கிவிடுவது அபராதத்தைத் தவிர்க்கும் சிறந்த வழியாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button