வீட்டுக்குள் புகுந்த திருடன் புதரில் பதுங்கினார்… போலீசார் சுற்றிவளைத்து கைது!
வீட்டுக்குள் புகுந்த திருடன் புதரில் பதுங்கினார்... போலீசார் சுற்றிவளைத்து கைது!

வீட்டுக்குள் புகுந்த திருடன் புதரில் பதுங்கினார்… போலீசார் சுற்றிவளைத்து கைது!
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணம், வெட்டிங்கன் பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒருவர், தனது வீட்டின் ஒரு அறைக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உரிமையாளர் இருப்பதை உணர்ந்த அந்த நபர், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியதாக ஆர்காவ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வெட்டிங்கன்–லிம்மாட்டல் பிராந்திய காவல்துறையும், ஆர்காவ் மாகாண காவல்துறையும் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையை தொடங்கின.
சிறிது நேரத்திலேயே, எட்செல்ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள ஒரு புதரில் பதுங்கியிருந்த நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் கொசோவோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் அவர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த திருட்டை உண்மையில் அந்தச் சிறுவன்தான் செய்தாரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், சுவிட்சர்லாந்தில் சிறார் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்த கவலையை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.





