Local Swiss News

41 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து… விசாரணை நடுவே அரசு வழக்கறிஞர் ராஜினாமா! புதிய திருப்பம்!

41 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து... விசாரணை நடுவே அரசு வழக்கறிஞர் ராஜினாமா! புதிய திருப்பம்!

41 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து… விசாரணை நடுவே அரசு வழக்கறிஞர் ராஜினாமா! புதிய திருப்பம்!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவில் 41 பேரின் உயிரைப் பறித்த கொடூர தீ விபத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த மூன்று அரசு வழக்கறிஞர்களில் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாலைஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த அரசு வழக்கறிஞர் புதிய தொழில்சார் பொறுப்பை ஏற்க இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இந்த தகவல், சுவிஸ் பொது ஒளிபரப்பு நிறுவனமான RTS வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டப் பிரதிநிதிகளுக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11j 5

அரசு வழக்கறிஞரின் விலகல் காரணமாக விசாரணை பாதிக்கப்படாது என்றும், மீதமுள்ள தலைமை அரசு வழக்கறிஞருடன் இணைந்து துணைத் தலைமை அரசு வழக்கறிஞர் வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள «லெ கான்ஸ்டலேஷன்» மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பெரும்பாலும் இளைஞர்களான 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 115 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் தீவிர காயங்களுக்குள்ளாகினர்.

இந்த வழக்கில், கிரான்ஸ்-மொன்டானா மேயர் நிக்கோலஸ் ஃபெராட், விடுதியின் உரிமையாளர்களான ஜாக் மற்றும் ஜெசிகா மோரெட்டி உள்ளிட்ட 13 அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

41 உயிர்களை காவு வாங்கிய இந்த சோக சம்பவத்தின் உண்மை காரணம் என்ன? பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கான பதிலை கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button